SELANGOR

சிலாங்கூர் குழுவைச் சேர்ந்த 200 தன்னார்வலர்கள் வெள்ளத்தை எதிர்கொள்ளும் அடிப்படை பேரிடர் பயிற்சி பெற்றனர்

ஷா ஆலம், ஜன. 18: வெள்ளத்தை எதிர்கொள்வதற்காகச் சிலாங்கூர் குழுவைச் சேர்ந்த 200 தன்னார்வலர்கள் கடந்த ஆண்டு தொடங்கி அடிப்படை பேரிடர் பயிற்சி மேற்கொண்டனர்.

தற்காப்புப் படையிடனான இந்த பயிற்சியானது, வெள்ளச் சூழ்நிலைகளின் போது சரியான வழிமுறைகள் மற்றும் நுட்பங்களை உறுப்பினர்களுக்கு கற்று கொடுப்பதையே நோக்கமாகக் கொண்டது என்று செயலகத் தலைவர் சியாஹைசல் கெமன் கூறினார்.

“வெள்ளத்தின் போது மற்றும் வெள்ளத்திற்குப் பின் எவ்வாறு சூழ்நிலையை கையாள்வது என்பது குறித்து உறுப்பினர்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது.

“படகுகளை இயக்க பயிற்சி பெற்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதுவும் ஒரு ஆயத்த நடவடிக்கையாகும்,” என்று அவரை இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

முன்னதாக, சிலாங்கூர் தன்னார்வத் தொண்டர்கள் (சேவை மீட்பு), மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBOM) மற்றும் நீர் மீட்புக் குழுவுடன் இணைந்து சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அடிப்படைப் பயிற்சியைப் பெற்றனர்.


Pengarang :