ALAM SEKITAR & CUACANATIONAL

இன்று முதல் ஜனவரி 23 வரை தீபகற்பக் கிழக்கில் பருவமழை

கோலாலம்பூர், ஜன 19: இன்று முதல் ஜனவரி 23 வரை தீபகற்பக் கிழக்கில் பருவமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அப்பகுதிகளில் தொடர் மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் (மெட் மலேசியா) இயக்குநர் ஜெனரல் முஹம்மது ஹெல்மி அப்துல்லா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜொகூர், பகாங், கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களில் நாளை முதல் ஜனவரி 22 வரை தொடர் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“இதற்கிடையில் சரவாக் மற்றும் சபாவிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 23ஆம் திகதி வரை தென் சீனக் கடல் பகுதி பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு www.met.gov.my என்ற இணையதளத்தையும் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கவும் செய்யவும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :