ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தலைமை கணக்காய்வாளர் அறிக்கையில் உள்ள குறைகளை சரி செய்தால் வெ.600 கோடி வரை காப்பாற்ற முடியும்

புத்ராஜெயா, ஜன 20- தேசிய தலைமை கணக்காய்வாளர் தாக்கல் செய்த அறிக்கையில் காணப்படும் குறைகளைச் சரி செய்திருந்தால் 500 முதல் 600 கோடி வெள்ளி வரை காப்பாற்றியிருக்க முடியும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.

தலைமைக் கணக்காய்வாளரின் 2021 ஆம் ஆண்டிற்கான அமைச்சரவை நேற்று முன்தினம் ஆய்வு செய்த போது பல தவறுகள் திரும்பத் திரும்ப புரிய பட்டுள்ளது தெரிய வந்ததாக “நாகரீக மலேசியாவை உருவாக்குதல்“ கோட்பாட்டை முன்வைத்து உரையாற்றிய போது அவர் கூறினார்.

தலைமை கணக்காய்வாளர் பல ஆண்டுகளாகத் திரும்பத் திரும்பச்  சுட்டிக்காட்டிய பலவீனங்களை அரசியல் தலைவர்களும்  அரசு ஊழியர்களும் சரி செய்திருந்தால் 500 முதல் 600 கோடி வெள்ளி வரை காப்பாற்றியிருக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாத செலவினங்கள், நிதிக் கசிவு தொடர்பில் 2021 ஆம் ஆண்டிற்கான தலைமை கணக்காய்வாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறை கூறல்களை தீவிரமாக எடுத்துக் கொள்ளும்படி அன்வார் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இது தவிர, அரசு நிர்வாகம், குறிப்பாக பெரும் திட்டங்கள் தொடர்பான விவகாரங்களில் முறையாகவும் திறனுடனும் செயல்பட்டிருந்தால்  மேலும் பல கோடி வெள்ளியை காப்பாற்றியிருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நமக்கு 1,500 கோடி வெள்ளி பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் சிறப்பாகவும் திறமையாகவும் செயல்பட்டால் எந்த ஒரு திட்டம் அல்லது முன்னெடுப்பும் இன்றி அந்த 1,500 கோடி வெள்ளியை பெற்று இருந்திருக்க முடியும் என்றார் அவர்.


Pengarang :