SELANGOR

சிலாங்கூர் அளவிலான சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பு

ஷா ஆலம்,  ஜனவரி 23: ஜனவரி 28 ஆம் தேதி ஷா ஆலமில் உள்ள டத்தாரன் மெர்டேகாவில் சிலாங்கூர் அளவிலான சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இந் நிகழ்ச்சி மாலை 3.30 மணிக்குத் தொடங்கி  இரவு 10.30 மணி வரை நடைபெறும். பொது மக்களுக்குப் பல்வேறு சுவாரசியமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப் பட்டியிருப்பதாகச் சிலாங்கூர் மாநிலச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“சிலாங்கூர் மாநில அளவிலான சீனப் புத்தாண்டு திறந்த இல்லக் கொண்டாட்டத்தை திரளாகக் கொண்டாட வாருங்கள்.

விற்பனை பஜார், கலிக்கிராப்பிக் போட்டி, சீனக் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. 10,000 பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Pengarang :