ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரின் ஐந்து மாவட்டங்களில் மாலை 4.00 மணி வரை இடியுடன்கூடிய மழை பெய்யும்


ஷா ஆலம், ஜன 24- இன்று  மாலை  4.00 மணி வரை சிலாங்கூரின் ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனத்த மழை மற்றும் வலுவான காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், கிள்ளான், கோல லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களோடு லாபுவான் முழுவதும் இந்நிலை நீடிக்கும் என்று ட்விட்டர் மூலம் அத்துறை தெரிவித்துள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சிரம்பான், போர்ட்டிக்சன், சரவாக்கின் லிம்பாங் மற்றும்  சபாவின் சிபித்தாங், கோல பென்யு மற்றும் பியூஃபோர்ட் ஆகியவை வானிலை பாதிப்பை எதிர் நோக்கியுள்ள இதர மாநிலங்களாகும் என அது குறிப்பிட்டது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கு மேல்   இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் இருக்கும் போது இந்த எச்சரிக்கை வெளியிடப்படுகின்றது. 

இடியுடன் கூடிய மழை முன்னறிவிப்பு என்பது  ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகக் கூடிய குறுகிய கால எச்சரிக்கையாகும்.

வானிலை தொடர்பான மேல் விபரங்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் வலம் வரலாம்.

Pengarang :