HEALTHMEDIA STATEMENT

நாட்டில் நேற்று 142 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு

ஷா ஆலம், ஜன 24- நாட்டில் நேற்று 142 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அண்மைய மாதங்களில் பதிவான மிகவும் குறைவான நோய்த் தொற்று எண்ணிக்கை இதுவாகும். 

இந்த புதிய தொற்றுகளுடன் சேர்த்து கோவிட்-19 பெருந்தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்து 34 ஆயிரத்து 972ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் கே.கே.எம்.நாவ் அகப்பக்கம்  கூறியது.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகவில்லை. நேற்று முன்தினமும் இந்நோயினால் யாரும் மரணமடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் வழி நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,932ஆக இருந்து வருகிறது.

 நேற்றைய நிலவரப்படி நாட்டில் 10,212 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிர தாக்கத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் 337 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் 16 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிலாங்கூரில் மிக அதிகமாக 53 பேரும் கோலாலம்பூரில் 27 பேரும் மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலானில் தலா 10 பேரும் ஜோகூரில் 8 பேரும் புத்ரா ஜெயாவில் 7 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 


Pengarang :