ALAM SEKITAR & CUACASELANGOR

டீம் சிலாங்கூர் துப்புரவு இயக்கத்தின் வழி மூன்று வாரத்தில் 1,700 கிலோ குப்பைகள் சேகரிப்பு

ஷா ஆலம், ஜன 24- டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் இம்மாதம்  தொடக்கம் முதல் மேற்கொள்ளப்பட “கிப் கிளீன் டிங்கி“ எனும் டிங்கி பரவலுக்கு எதிரான துப்பரவு இயக்கத்தின் வாயிலாக 1,700 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

இங்குள்ள செக்சன் 7 அடுக்குமாடி குடியிருப்பின் மூன்று இடங்களில் இந்த துப்புரவு இயக்கம் மேற்கொள்ளப்பட்டதாக டீம் சிலாங்கூர் செயலகத்தின் தலைவர் ஷியாய்செல் கெமாய்ன் கூறினார்.

டிங்கி பரவல் அதிகம் உள்ள இடங்களை இலக்காக கொண்டு இந்த துப்புரவு இயக்கம் மேற்கொள்ளப்பட்டதாக கூறிய அவர், இதன் வழி சுற்றுப் புறங்களை சுத்தமாக வைத்திருப்பதில் வட்டார மக்களின் பங்கேற்பையும் உறுதி செய்ய முடிந்ததாக குறிப்பிட்டார்.

இந்த துப்புரவு இயக்கத்தை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம். நான்காம் கட்டத் துப்புரவு இயக்கம் இமாதம் 29ஆம் தேதி செக்சன் 7 பகுதியில் மீண்டும் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சுற்றுச் சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்கள் மத்தியில் உணர்த்தும் நோக்கில் டீம் சிலாங்கூர் அமைப்பினர் கடந்த ஆண்டு முதல் இத்தகைய துப்புரவு இயக்கங்களை நடத்தி வருகிறது.


Pengarang :