SELANGOR

மூத்தக் குடிமக்கள் உதவித் திட்டத்திற்கு 1,000 விண்ணப்பங்கள்- கோம்பாக் செத்தியா தொகுதி பெற்றது

கோம்பாக், பிப் 2- மூத்தக் குடிமக்கள் நட்புறவு உதவித் திட்டத்திற்குக் (எம்.எஸ்.யு.இ.) கடந்த மாதம் வரை 1,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைக் கோம்பாக் செத்தியா தொகுதி பெற்றுள்ளது.

பூர்த்தி செய்வதற்கு எளிதாக உள்ள காரணத்தால் மேலும் அதிகமான விண்ணப்பங்களைத் தாங்கள் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாகத் தொகுதி நடவடிக்கை மையத்தின் அதிகாரி டின் யாஹ்யா கூறினார்.

இந்த திட்டத்திற்குப் பொது மக்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவு உற்சாகமூட்டும் வகையில் உள்ளது. மேலும் அதிகமானோர் இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வர் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்த திட்டம் மட்டுமல்லாது மாநில அரசின் இதர திட்டங்களின் வாயிலாகவும் மக்கள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.

புதிய மற்றும் நடப்பிலுள்ள பயனாளிகளை உள்ளடக்கிய 1,600 பேர் தங்களுக்கான பற்றுச் சீட்டினைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

பிறந்த மாதத்தின் போது 150 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகளையும் மரணச் சகாய நிதியாக 500 வெள்ளியையும் பெறுவதற்குரிய வாய்ப்பினை இந்த எம்.எஸ்.யு.இ. பயனாளிகள் பெறுகின்றனர்.


Pengarang :