NATIONAL

இந்துக்களுக்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

கோலாலம்பூர், பிப். 5: இந்த நாட்டில் வாழும் அனைத்து இந்துக்களுக்கும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் கொண்டாடப்படும் பண்டிக்கைகளும் மற்றும் பின்பற்றப்படும் பல்வேறு கலாச்சாரம் மலேசியர்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளவும், பன்மைத்துவ தேசிய ஒழுங்கைப் பற்றிய புரிதலை உருவாக்கவும் உதவுகிறது என்றார் அன்வார்.

இன்று தனது முகநூலில் பதிவிட்டுள்ள பதிவின் மூலம், “நமது அன்புக்குரிய தேசத்திற்காக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.

தலைநகர் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல முக்கிய கோவில்களில் இந்து சமூகம் இன்று தைப்பூசத் திரு விழாவைக் கொண்டாடுகிறது.

தைப்பூசம் என்பது தமிழ் நாட்காட்டியின் 10வது மாதமான தை மாதத்தில் கொண்டாடப்படும் திருவிழாவாகும், இது தீய சக்தியான சூரபத்மனை அழித்து மனித நல்வாழ்வையும் செழிப்பையும் மீட்டெடுக்க பார்வதி தேவி தனது மகன் முருகனுக்குப் புனித   வேலை வழங்கிய நிகழ்வின் நினைவாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

– பெர்னாமா


Pengarang :