ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச திருவிழா  பண்பாட்டுடன் சிறப்பாக நடந்தேறியது

கோலசிலாங்கூர்  படம்  செய்திகள் 

சுப்பையா சுப்ரமணியம்

கோல சிலாங்கூர்.பிப்-5. கோல சிலாங்கூர் இரண்டரை மையிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் தைப்பூச திருவிழா மிக நேர்த்தியாக நடை பெற்றது.105 ஆண்டுகள் வரலாற்றை சுமந்து வெற்றி நடை போடுகிறது இவ்வாலயம். குறைந்தது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பக்கதர்கள் இவ்வாண்டு தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

பால் குடங்கள், கரும்பு காவடிகள், காவடிகள், அளவு குத்துதல் போன்ற அனைத்து சமய பூஜைகள் அனைத்தும் ஆலயத்திற்கு அருகில் உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் தொடங்கி ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆலயத்தில் முருக பெருமானுக்கு பக்தர்கள் காணிக்கை ஆக்குகின்றனர். ஆர்பாட்டமின்றி அமைதியான முறையில் பக்தர் சமய நெறிகளை பின் பற்றி காவி உடை அணிந்து பால் குடம், காவடி எடுத்து செல்லும் காட்சி பார்ப்பவர்களுக்கு பக்தி பரவசம் ஊட்டுகிறது. மஞ்சள் நிறத்திலான ஆடைகளுடன் ஆண்களும் பெண்களும் பால் குடம் ஏந்தி வரும் காட்சி பக்தி பரவசம் மூட்டுகிறது.

கடந்த இரு ஆண்டுகளாக இந்துக்கள் தைப்பூசத்தை சிறப்பாக கொண்டாட முடியவில்லை. கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக கடந்த  ஈராண்டுகள் அரசு கட்டுப் பாட்டுடன் தைப்பூசம் நம் நாட்டில் மிதமான அளவில் கொண்டாட பட்டது. ஆனால் இவ்வாண்டு அனைத்து தடைகளும் அகற்றப்பட்டு விட்டது. இதனால் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்துக்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை பக்தி பரவசத்துடன் செலுத்தினர்.

கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடந்த ஒரு வார காலமாக தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த தொடங்கி விட்டனர். மேலும் இவ்வாண்டு ஞாயிற்றுக்கிழமை தைப்பூச திருவிழா வெள்ளி,சனி,ஞாயிறு, திங்கள் ஆகிய கிழமைகளில் பக்தர்கள் தங்களது காணிக்கையை செலுத்துவார்கள். இதனால் இவ்வாண்டு நமது கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தில் குறைந்தது ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் திரள் வார்கள்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆலயத்தின் அறங்காவலர்களின் முன்னாள் உறுப்பினரான ஆசிரியர் சகதேவன் குப்பன் தெரிவித்தார்.

ஒரு கிலோ மீட்டர் தூரம் பால் குடம் ஏந்தி வெற்றி வேல் முருகனுக்கு, வீரவேல் முருகனுக்கு என்ற தாரக மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு குடும்பம் குடும்பமாக ஊர்வலமாக ஆலயத்தை நோக்கி பக்தர்கள் கூட்டம் வந்தடைந்தது.

ஆலய வளாகத்திற்குள் வந்தடைந்த பக்தர்கள் ஆலயத்தை சுற்றி ஒரு முறை வலம் வந்த பின்னர் வரிசையாக அணிவகுத்து ஆலயம் சென்றடைந்து தங்களது நேர்த்திக்கடனை முருகப் பெருமானுக்கு செலுத்தி விட்டு, பின்னர் சற்று நேரம் ஆலய வளாகத்தில் அமர்ந்து ஓய்வு எடுத்து விட்டு அமைதியாக பக்தர்கள் தங்களது வீடு புறப்பட்ட காட்சி மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

ஆக மொத்தத்தில் கடந்த ஈரண்டுகளாக நேர்த்தி கடனை செலுத்த முடியாமல் பரிதவித்த இந்துக்கள் இவ்வாண்டு அமைதியான முறையில் காவி சீருடைகளுடன் கலந்து கொண்டு தங்களது உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தியது பாராட்டுக்குறியது. ஆக மொத்தத்தில் இவ்வாண்டு கோல சிலாங்கூர் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய தைப்பூச திருவிழா சீரும் சிறப்புமாக நடந்தேறியது என்றால் அது மிகையாகாது.

குறைந்தது 8 ஏக்கர் நிலத்தை கொண்ட இவ்வாலயம் சைவ உணவு, பலகார கடைகள், குளிர்பானம், துணிமணிகள் என்று கடைகளும் ஆலய வளாகத்தில் பக்தர்களின் நலனுக்காக அமைக்கப் பட்டிருந்தது.


Pengarang :