NATIONAL

சிரியாவில் நிலநடுக்கம் – மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

புத்ராஜெயா, பிப் 8- சிரியாவில் ஏற்பட்ட நிலநடுகத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடீர் உறுதிப்படுத்தினார். அந்நாட்டிலுள்ள மலேசியத் தூதரக அதிகாரி அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த விபரம் தெரிய வந்ததாக அவர் சொன்னார்.

மேலும், நில அதிர்வுகள் தொடர்ந்து நிகழக்கூடிய சாத்தியம் உள்ளதால் சிரியாவிலுள்ள மலேசியர்கள் மிகவும் விழப்புடன் இருக்கும் அதேவேளையில் அந்நாட்டு அதிகாரிகள் வெளியிடும் அறிவுரைகளைப் பின்பற்றி நடக்கும்படி அவர் அறிவுறுத்தினார்.

இந்த நிலநடுகத்தில் பாதிக்கப்பட்ட சிரிய நாட்டு மக்களுக்கும் அந்நாட்டு அரசாங்கத்திற்கும் மலேசியாவின் சார்பில் தாம் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் ஏற்பட்ட வலுவான நில நடுக்கத்தில் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் தேவையான உதவிகளை வழங்க மலேசியாத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ரிக்டர் அளவில் 7.8 மற்றும் 7.6 எனப் பதிவான இரு நிலநடுக்கங்கள் துருக்கியை நேற்று முன்தினம் விடியற்காலை உலுக்கின. இந்த நிலநடுக்கத்தினால் அருகிலுள்ள சிரியாவும் பாதிக்கப்பட்டது.


Pengarang :