NATIONAL

அரசு சுகாதார மையங்களில் உடை கட்டுப்பாடு இல்லை – மலேசியச் சுகாதார அமைச்சு

ஷா ஆலம், பிப் 16: மலேசியச் சுகாதார அமைச்சகம் (MOH) பொது மக்களுக்கும் அல்லது அரசு சுகாதார மையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் உடை கட்டுப்பாடு விதிக்கவில்லை.

சுகாதார ஜெனரல் டைரக்டர் டான்ஶ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இந்த விஷயம் ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்றும், குறிப்பாக அவசரகால நேரங்களில் இது ஒரு பிரச்சினையாக இருக்க தேவையில்லை என்றும் பெரித்தா ஹரியானிடம் தெரிவித்தார்.

“அவசர நேரங்களில் மருத்துவமனைக்கு வரும்போது, ஆடை ஒரு பிரச்சனை இல்லை. ஆனால் மசூதிகள், கோயில்கள் போன்ற மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லும் போது, ஆடை பிரச்சனை இருக்கும்,“ என்றார்.

“எனவே இந்த விஷயத்தை நாங்கள் ஏற்கனவே கொண்டு வந்துள்ளோம். அதனால், இந்த பிரச்சனை மீண்டும் வந்தால் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு கண்டனம் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.


Pengarang :