MEDIA STATEMENT

மூன்று முறை பிடிப்படும் திருந்தவில்லை- கெத்தும் பானம் விற்ற நபர் கைது

பெட்டாலிங் ஜெயா, பிப் 17-  மூன்று முறை கைது செய்யப்பட்டபோதிலும் சற்றும் 
அஞ்சாமல் பதப்படுத்தப்பட்ட கெத்தும் நீரை விற்ற நபர் ஒருவர் மீண்டும் போலீசில் பிடிபட்டார்.

தாமான் மேடானில் உள்ள ஒரு வீட்டில் நேற்று போலீசார் நடத்திய சோதனையில்  கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் இந்த  சந்தேக நபரும் ஒருவராவார்.

மாலை 6.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கையில் கெத்தும் நீர் என சந்தேகிக்கப்படும் திரவம் நிரப்பப்பட்ட 92  பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமது  பக்ருடீன் அப்துல் ஹமீட் தெரிவித்தார்.

தலா 1.5 லிட்டர் கொண்ட அந்த அனைத்து கெத்தும் நீர் பாட்டில்களின் மொத்த கொள்ளளவு 138,000 மில்லிலிட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவரை மேற்கோள் காட்டி சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

கெத்தும் நீர் தவிர்த்து  50 கிலோ எடையுள்ள கெத்தும் இலைகள் அடங்கிய 10 பிளாஸ்டிக் பைகளும் இந்நடவடிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

கைது செய்யப்பட்ட 23 முதல் 37 வயதுடைய சந்தேக நபர்கள் அனைவரும் நாளை வரை விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேக இந்நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபருக்கு ஏழு குற்றவியல் பதிவுகள் உள்ளதோடு 1952ஆம் ஆண்டு விஷச் சட்டத்தின் (திருத்தம் 2022) இன் கீழ் மூன்று முந்தைய தண்டனைகளை பெற்றுள்ளார் என பக்ருடின் குறிப்பிட்டார்.

Pengarang :