ALAM SEKITAR & CUACANATIONAL

கால்வாயில் தவறி விழுந்த சிறுவனின் உடல் மீட்பு

ரவாங், பிப் 20- ரவாங்,  தாமான் பெலாங்கியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள கால்வாயில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஆறு வயது சிறுவனின் உடல் 
நேற்றிரவு  7.45 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

முகமது ஆடாம் ஃபாஹ்மி முகமது ஹிஸ்லான் என்ற அச்சிறுவனின் உடல் ரவாங் டொயோட்டா கார் சர்வீஸ் நிலையத்திற்கு  அருகில் உள்ள ஆற்றில் குடியிருப்பாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை அதிகாரி அப்துல் லத்திப் மாட் நூர் கூறினார்.

முன்னதாக,  இச்சம்பவம் குறித்து கருத்துரைத்த சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குனர் ஹபிஷாம் முகமட் நூர், சிறுவன் கால்வாயில் விழுந்தது தொடர்பில் நேற்று மாலை 6.19 மணிக்கு தாங்கள் புகாரைப் பெற்றதாகக் கூறினார்.

ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து 10 பேர் கொண்ட  குழுவினர் இரண்டு இயந்திரங்களில்  சம்பவ இடத்திற்கு சுமார் நான்கு நிமிடங்களில் அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், முகமது ஆடாமின் தந்தை முகமது ஹிஸ்லான் முஹாட் அசுமி, தனது மகனுக்கு நேர்ந்த  சம்பவம் குறித்து அறிந்து சக குடியிருப்பாளர்களுடன் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.

சம்பவத்தின் போது நான் வீட்டில் இருந்தேன். என் பிள்ளை கால்வாயில் தவறி விழுந்துவிட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த என் நண்பர்கள் சிலர் உதவ முயன்றனர், ஆனால் வேகமான நீரோட்டத்தில் எனது மகன் அருகில் உள்ள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார் என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.

Pengarang :