PENDIDIKANSELANGOR

எஸ்.பி.எம். தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மந்திரி புசார் வாழ்த்து

ஷா ஆலம், பிப் 20- இன்று தொடங்கும் எஸ்.பி.எம். தேர்வில் மாணவர்கள் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்ய மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

கடுமையாகப் பாடுபட்டு தயார் நிலையில் இருக்கும் மாணவர்கள் தேர்வை சிறப்பாக எழுத தாம் பிரார்த்திப்பதாக அவர தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

இன்று எஸ்.பி.எம். தேர்வை எழுதத் தொடங்கும் மலேசியாவிலுள்ள குறிப்பாக சிலாங்கூரை சேர்ந்த மாணவர்களுக்கு நான் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடுமையான பாடுபட்டு தயார் நிலையில் இருக்கும் நீங்கள் சிறப்பான முறையில் தேர்வை எழுத விழைகிறேன். என்று அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய  பங்கினை ஆற்றும் இந்த தேர்வுக்கு மாணவர்களைத் தயார் படுத்துவதில் மாநில அரசின் ஏற்பாட்டிலான டியூஷன் ராக்யாட் மற்றும் பி.டி.ஆர்.எஸ். இணையத் தளம் ஆகியவை முக்கியப் பங்கினை ஆற்றும் என தாம் கருதுவதாகவும் அவர் சொன்னார்.

இந்த பி.டி.ஆர்.எஸ். திட்டம் கடந்தாண்டில் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் வழி மாநிலத்திலுள்ள சுமார் 25,000 மாணவர்கள் பயன்பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டியது.

கூடுதல் வகுப்புத் திட்டம் தவிர்த்து மாணவர்களின் வசதிக்காக எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் ஒருங்கிணைக்கப்பட்ட கழகத்தின் வாயிலாக மதிய உணவுத் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.


Pengarang :