ALAM SEKITAR & CUACAANTARABANGSA

துருக்கி பூகம்பம்- மரண எண்ணிக்கை 41,020ஆக உயர்வு

அங்காரா, பிப் 20- இம்மாதம் 6ஆம் தேதி தென் துருக்கியை உலுக்கிய வலுவான நிலநடுக்கத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 41,020 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியது. 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 19,436 மீட்புப் பணியாளர்கள் தேடி மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வேளையில் பூகம்பப் பகுதிகளில் 216,166 தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை நிறுவனத்தை மேற்கோள் காட்டி அனாடோலு செய்தி வெளியிட்டுள்ளது.

கஹாரமான்மாராஸ்  மற்றும் ஹாத்தாய் பிரதேசங்கள் தவிர்த்து பூகம்பத்தால் பாதித்க்கப்பட்ட மற்றப் பகுதிகளில் தேடல் மற்றும் மீட்புப் பணிகள் முற்றுப் பெற்று விட்டதாக அந்நிறுவனத்தின் தலைவர் யூனுஸ் சஸீர் கூறினார்.

சுமார் 40 கட்டிடங்களில் மீட்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன.  வெளியேற்றப்பட்ட 460,900 பேர் தங்குவதற்காக 6,000 கொள்கலன்கள் தயார் செய்யப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 318,970 பேர் தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்

பூம்பத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 800,000 பேருக்கு தலா 10,000 துருக்கிய லிரா தொகை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :