SELANGOR

ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் பெற்றுக் கொள்ளவும் டாருள் எஹ்சான் நீர் திட்டத்திற்குப் பதிந்து கொள்ளவும் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு 

அம்பாங் ஜெயா, மார்ச் 3: தெரத்தாய் தொகுதியின் சமூகச் சேவை மையம், இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தாமான் மூட பொது மண்டபத்தில் ஸ்கீம் மெஸ்ர ஊசிய எமாஸ் (SMUE) திட்ட நிகழ்வும் மற்றும் டாருள் எஹ்சான் நீர் திட்டப் பதிவையும் ஏற்பாடு செய்துள்ளது.

தெரத்தாய் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆலிஸ் தான் கூறுகையில், இதுவரை ஜோம் ஷாப்பிங் RM150 வவுச்சரை பெற்றுக்கொள்ளாத பெறுநர்கள் மற்றும் டாருல் எஹ்சான் நீர் திட்டத்திற்கு (SADE) பதிவு செய்யாதவர்கள் இந்நிகழ்வுக்கு வரவேற்கப்படுகின்றனர்.

“புள்ளிவிவரங்களின் அடிப்படையில், தெரத்தாய் தொகுதியில் மொத்தம் 6,500 முதியவர்கள் வவுச்சர்களைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர். ஆனால், 2,961 பேர் இன்னும் அவற்றைப் பெற்றுக் கொள்ளவில்லை. மேலும், தகுதியான 400 விண்ணப்பதாரர்கள் இன்னும் டாருல் எஹ்சான் நீர் திட்டத்திற்குப் பதிவு செய்யவில்லை.

“எனவே, இந்த நிகழ்வை அவர்கள் வவுச்சர்கள் பெற்றுக் கொள்ளவும் டாருல் எஹ்சான் நீர் திட்டத்துக்கு விண்ணப்பிக்கவும் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இந்நிகழ்வு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால் உதவி ஒருங்கிணைப்பாளர் ஃபிர்தௌஸ் பாப்பை 010-898 4552 அல்லது 016-313 6399 (ஆலிஸ்) என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

“டாருல் எஹ்சான் நீர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க சிலாங்கூரில் வசிக்கும் மலேசியர்களாகவும், RM5,000க்கும் குறைவான குடும்ப வருமானமாகும், தனிப்பட்ட மீட்டர்களை பயன்படுத்தும் வசிப்பிடமாகவும் இருக்க வேண்டும். பதிவு செய்ய உங்கள் அடையாள அட்டை மற்றும் தண்ணீர் பில் கொண்டு வாருங்கள்,“ எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

“மேலும், பதிவு செய்து மூன்று மாதங்களுக்கும் மேலாக வவுச்சர் எடுக்காத முதியவர்கள் மட்டுமே வர வேண்டும்,” என்று அவர் விளக்கினார்.


Pengarang :