NATIONAL

பெட்டாலிங் ஜெயா மாவட்டத்தில் அதிகரிக்கும் வாகனத் திருட்டு

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 3: இம்மாவட்டத்தில் வாகனத் திருட்டு வழக்குகள் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு இரண்டு மாதங்களில் 20.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி முகமட் ஃபக்ருதீன் அப்துல் ஹமிட் கூறுகையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 65 வழக்குகள் பதிவான வேளையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் வாகனங்கள் காணாமல் போனது தொடர்பாக மொத்தம் 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

“இதன் தொடர்பாக மொத்தம் 13 நபர்கள் கைது செய்யப்பட்டனர் மற்றும் எட்டு வாகனங்கள் வெற்றிகரமாகப் பறிமுதல் செய்யப் பட்டன,” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மாவட்டத்தைச் சுற்றியுள்ள குற்றங்கள் அடிக்கடி நிகழும் ஹாட்ஸ்பாட் பகுதிகளான டேசா மந்திரி, எஸ்எஸ்2, மந்திரி கோர்ட், ஃப்ளோரா டமன்சாரா மற்றும் லெம்பா சுபாங் ஜெயா ஆகிய இடங்களில் 34 பாதுகாப்பு அறிவிப்பு பலகைகளை நிறுவுவதற்கு கார்சம் நிறுவனம் நிதியுதவி செய்யும் என்றார்.

 – பெர்னாமா


Pengarang :