NATIONAL

சட்டத் துறை தலைவராக டான்ஸ்ரீ இட்ருஸ் மீண்டும் நியமனம்

புத்ராஜெயா, மார்ச் 3- நாட்டின் சட்டத் துறைத் தலைவர் டான்ஸ்ரீ இட்ருஸ்ஹருணின் பதவி காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 6ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கி இந்த நியமனம் அமலுக்கு வருவதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமது ஸூக்கி அலி கூறினார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 145வது பிரிவின் முதலாவது ஷரத்தின் கீழ் இந்த நியமனத்திற்கு மாட்சிமை தாங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா ஒப்புதல் அளித்துள்ளதாக முகமது ஸூக்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

கூட்டரசு நீதிமன்ற முன்னாள் நீதிபதியான இட்ருஸ் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி சட்டத் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். சட்டத் துறை தலைவர் அலுவலகத்தில் துணை பப்ளிக் புரோசிகியூட்டராகவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் சட்ட ஆலோசகராகவும் வழக்கறிஞராகவும் மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும் இட்ருஸ் பணியாற்றியுள்ளார்.


Pengarang :