MEDIA STATEMENT

சூதாட்ட இணையத்தளம் மற்றும் செயலியை உருவாக்கிய கும்பலின் 39 உறுப்பினர்கள் கைது

கோலாலம்பூர், மார்ச் 4- சூதாட்ட இணையத்தளம் மற்றும் செயலியை உருவாக்கி பயன் பயன்படுத்தி வந்த கும்பல் ஒன்றின் உறுப்பினர்களை போலீசார் கோலாலம்பூரின் சுற்றுவட்டாரத்தில் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 22ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் உள்நாட்டைச் சேர்ந்த 23 முதல் 49 வயது வரையிலான 22 ஆண்கள் மற்றும் 10 பெண்களையும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஐந்து ஆண்கள் மற்றும் இரு பெண்களையும் தாங்கள் கைது செய்ததாக அரச மலேசிய போலீஸ் படையின் செயலாளர் டத்தோ நோர்ஷியா முகமது சாடுடின் கூறினார்.

அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக தகவல் தொழில் நுட்ப மற்றும் கணினி வடிவமைப்பு நிறுவனங்களின் போர்வையில இந்த கும்பல் செயல்பட்டு வந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

இணையத் தளத்தையும் உருவாக்கும் சேவையை வழங்கி வந்த இவ்விரு நிறுவனங்களும் இணையத் தளம் மற்றும் செயலி வாயிலாக பல்வேறு விளையாட்டுகளையும் திரட்டி வந்தன என்று இங்கு இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

இந்சோதனை நடவடிக்கையில் 30 மடிக்கணினிகள், ஒன்பது கணினிகள், 47 கைப்பேசிகள், ஒரு அனைத்துலக கடப்பிதழ் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.

அவர்கள் அனைவரும் 1953ஆம் ஆண்டு பொது இட சூதாட்டச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :