ECONOMY

சிலாங்கூரில் முதலீடு செய்ய ஜப்பானிய பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம்- மந்திரி புசார் தகவல்

ஷா ஆலம், மார்ச் 12- சிலாங்கூர் மாநிலத்தில் முதலீடு செய்ய முப்பதுக்கும் மேற்பட்ட ஜப்பானிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. மலேசியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான உந்து சக்தியாக சிலாங்கூர் விளங்குவதை இது புலப்படுத்துகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஜப்பானுக்கு தாம் மேற்கொண்ட குறுகிய கால வருகையின் போது மாநிலத்தில் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை அந்நிறுவனங்கள் வெளிப்படுத்தியதாக  அவர் சொன்னார்.

இன்வெஸ்ட் சிலாங்கூர், மிடா எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த முதலீட்டுப் பயணத்தின் போது ஓசாகா நகரில் கடந்த 7ஆம் தேதியும் தோக்கியோவில் 8ஆம் தேதியும் வட்ட மேசை மாநாடு நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம்மும் பங்கேற்ற இந்த முதலீட்டுப் பயணத்தில் சிலாங்கூர் மேம்பாட்டுக கழகம் மற்றும் என்.சி.டி. குழும ம் ஆகிய தரப்பினரும் இடம் பெற்றிருந்தனர் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

கடந்த 2017 முதல் 2021 வரையிலான மிடாவின் தரவின் படி அதிக நேரடி முதலீடுகளைப் பதிவு செய்த நாடுகள் பட்டியலில் 80,400 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகளுடன் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது.

சிலாங்கூரை மையமாக க் கொண்ட சோனி, பெனாசோனிக், டோயோட்டா, டென்சோ, யாய்கின் போன்ற நிறுவனங்களின் வாயிலாக இங்கு சுமார் 5,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.


Pengarang :