SELANGOR

உரப்பாசனப் பயிரீட்டுத் திட்டத்திற்குக் காலி நிலங்களை அடையாம் காண்பீர்- ஊராட்சி மன்றங்களுக்கு வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 21- உரப்பாசன பயிரீட்டுத் திட்டத்தை
மேற்கொள்வதற்கு ஏதுவாக தங்கள் பகுதிகளில் உள்ள காலி நிலங்களை
அடையாளம் காணும்படி ஊராட்சி மன்றங்களு கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளன.

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஐ.பி.ஆர். எனப்படும் மக்கள்
வருமானத் திட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் வேளாண் தொழில்
முனைவோர் முன்னெடுப்புக்கு (இந்தான்) ஆதரவளிக்கும் நோக்கில்
இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த இந்தான் திட்டம் வெற்றியடைவதை குறிப்பாக நிர்ணயிக்கப்பட்ட
இலக்கை சென்றடைவதை உறுதி செய்ய விரும்புகிறோம். ஆகவே,
(இத்திட்டத்திற்காக) 20 முதல் 50 ஏக்கர் வரையிலான நிலத்தை
அடையாளம் காணும்படி ஊராட்சி மன்றங்களைக் கேட்டுக் கொள்கிறேன்
என்று அவர் குறிப்பிட்டார்.

தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தின் மின் பாதைக்கு கீழுள்ள
இடங்கள் அல்லது அரசாங்க நிலங்களாக அவை இருக்க வேண்டும் என்ற
அவசியமில்லை. மக்களின் வருமானத்தைப் அதிகரிப்பதற்கு உதவக்கூடிய
சிறந்த ஒரு திட்டமாக இது விளங்க வேண்டும் என்பதே எனது
எதிர்பார்ப்பாகும் என்றா அவர்.

இங்குள்ள டாமன்சாரா பெலாங்கி மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பு
பகுதியில் ஐபிஆர் இந்தான் பிஜே சிட்டி ஃபூட் வேலி திட்டத்தின் தொடக்க
நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த
நிகழ்வை பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி அதிகாரப்பூர்வமாக
தொடக்கி வைத்தார்.

இந்த பிஜே சிட்டி ஃபூட் வேலி என்பது இதற்கு முன்னர் அமல்படுத்தப்பட்ட
சமூக வேளாண் திட்டம் போலன்றி சுமார் 80 ஏக்கர் நிரப்பரப்பில் பெரிய
அளவில் பொருளாதார ரீதியில் மேற்கொள்ளப்படும் ஒரு நீர்ப்பாசன
திட்டமாகும் என அமிருடின் சொன்னார்.


Pengarang :