SELANGOR

தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி பட்டதாரிகளுக்குச் சம்பளம்

ஷா ஆலம், மார்ச் 22: வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (எம்ஐடிஐ) தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி பட்டதாரிகளுக்குச் (டிவிஇடி) சம்பளம் வழங்குவது உள்ளிட்ட வர்த்தகக் கொள்கைகளை மாற்றியமைத்து ஒருங்கிணைக்க விரும்புகிறது.

நாட்டின் தொழிலாளர் சந்தையில் ஊதிய அமைப்பு மிகவும் குறைவாக இருப்பதால், பல வெளிநாட்டு தொழிலாளர்கள் அதை ஆக்கிரமித்துள்ளனர் எனத் துணை அமைச்சர் லீவ் சின் தோங் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்கண்டார் புத்ரியின் கூற்றுப்படி, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி பட்டதாரிகளுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் RM3,000 சம்பளம் பரிந்துரைக்கும் தேசியத் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி கவுன்சில் பரிந்துரை தற்போதைய சூழ்நிலைக்குப் பொருத்தமானது.

“தொழில் வழங்குனர்கள் திறமையற்ற வெளிநாட்டு ஊழியர்களை தொடர்ந்து வேலைக்கு அமர்த்தும் போது, நமது திறமையான குடிமக்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க நிறுவனங்களுக்கு எண்ணம் இல்லை” என்று அவர் கூறினார்.

டி.வி.இ.டி பட்டதாரிகளுக்கு அதிக வேலை வாய்ப்புகளை திறக்க தொழில்துறையை ஆராய்வதற்கான எம்.ஐ.டி.ஐ-யின் திட்டங்கள் குறித்து டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி (கோம்பாக்-பக்கத்தான்) கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

கடந்த வாரம், டத்தோஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி, டி.வி.இ.டி பட்டதாரிகளுக்கு முதலாளிகள் அல்லது தொழில்துறையினர் குறைந்தபட்ச சம்பளமாக மாதம் 3,000 ரிங்கிட் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.


Pengarang :