ECONOMYSELANGOR

நீர் மாசுபாட்டைத் தடுக்க சிலாங்கூரில் மணல் சுரங்க நடவடிக்கைகள் மீது தீவிர கண்காணிப்பு- லுவாஸ்

ஷா ஆலம், மார்ச் 23- ஆறுகளில் மாசுபாடு ஏற்படுவதைத் தடுக்க சிலாங்கூர் மாநிலத்தில் லைசென்ஸ் பெற்ற மணல் சுரங்க நடவடிக்கைகள் தொடர்ந்தாற்போல் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தமது தரப்பு வழங்கியுள்ள எழுத்துப்பூர்வ நிபந்தனைகள் பின்பற்றப்படுவது மற்றும் மணல் எடுக்கும் நடவடிக்கைகளால் நீர் ஆதாரங்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாக சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் (லுவாஸ்) கூறியது.

கட்டுப்பாடுகளை அமல்படுத்தாவிட்டால் மணல் எடுக்கும் அல்லது மணல் சுரங்க நடவடிக்கைகளால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் சாத்தியம் உள்ளது. ஆற்று நீர் மாசுபடுவது, ஆற்றின் கரைகள் வலுவிழப்பது போன்ற காரணங்களால் நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அது தெரிவித்தது.

2013ஆம் ஆண்டு (சிலாங்கூர்) வளமாற்று நடவடிக்கை விதிமுறைகளின் கீழ் இந்த கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக லுவாஸ் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.


Pengarang :