ECONOMY

நோன்புப் பெருநாளை முன்னிட்டு கூடுதல் இ.டி.எஸ். இரயில் சேவை- கே.டி.எம்.பி. ஏற்பாடு

கோலாலம்பூர், மார்ச் 24- இவ்வாண்டு நோன்புப் பெருநாள் மற்றும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கூடுதலாக நான்கு மின்சார இரயில் சேவைகளை (இ.டி.எஸ்.) சேவைகளை கெராத்தாப்பி தானா மிலாயு பெர்ஹாட் (கே.டி.எம்.பி.) ஏற்பாடு செய்துள்ளது.

வரும் ஏப்ரல் 19 முதல் 25ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் கே.எல். சென்ட்ரல் முதல் பாடாங் பெசார் வரை சென்று திரும்புவது மற்றும் கே.எல். சென்ட்ரல் முதல் பட்டர்வொர்த் வரை சென்று திரும்புவது ஆகிய பயணங்களை இந்த கூடுதல் சேவை உள்ளடக்கியுள்ளதாக கே.டி.எம்.பி. நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

இந்த கூடுதல் இ.டி.எஸ். சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று காலை 10.00 முதல் விற்கப்படும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

இந்த கூடுதல் பயணச் சேவைக்கு தினசரி தலா 1,260 டிக்கெட்டுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து வர்த்தக வகுப்பு உள்ளிட்ட அனைத்து சேவைக்கான டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 13,860 ஆக அதிகரித்துள்ளது.

இவ்விரு தடங்களுக்கான கூடுதல் இ.டி.எஸ். சேவையின் போது 14 கூடுதல் பயணச் சேவைகள் வழஙகப்படும். ஒவ்வொரு பயணத்தின் போது 4,410 டிக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்படும்.

இதனிடையே, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 28 முதல் மே 1 வரை 16 கூடுதல் பயணச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கே.டி.எம்.பி. நிறுவனம் தெரிவித்தது.

இந்த கூடுதல் சேவைக்கு மட்டும் 5,040 டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ள வேளையில் மேற்குறிப்பிட்ட தேதிகளில் விற்பனைக்கு வைக்கப்படும் மொத்த டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 109,890 ஆகும் என அது குறிப்பிட்டது.


Pengarang :