KUALA LUMPUR, 25 Mei — Para pengguna tren Sistem Transit Aliran Ringan (LRT) menunggu giliran untuk menaiki tren untuk ke destinasi masing-masing ketika tinjauan di Stesen LRT Pasar Seni hari ini. Perkhidmatan tren LRT Laluan Kelana Jaya beroperasi seperti biasa bermula 6 pagi tadi dengan menggunakan satu landasan dengan disokong perkhidmatan bas perantara percuma. Prasarana Malaysia Berhad (Prasarana) dalam kenyataan awal hari ini, berkata dengan kekerapan tren setiap 10 minit pada waktu puncak dan 30 minit pada waktu lain serta pengurangan kapasiti kepada 50 peratus susulan Perintah Kawalan Pergerakan (PKP) 3.0, penumpang dijangka perlu menunggu dengan lebih lama sedikit daripada biasa. Malam tadi, seramai 213 penumpang cedera dengan 47 daripadanya cedera parah dalam kemalangan membabitkan dua tren LRT, masing-masing dari arah Gombak dan Kelana Jaya. — fotoBERNAMA (2021) HAK CIPTA TERPELIHARA
ECONOMY

அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் உள்ள ஆறு நிலையங்களின் எல்.ஆர்.டி செயல்பாடுகள் ஏப்ரல் 2 முதல் நிறுத்தி வைக்கப்படும்.

கோலாலம்பூர், மார்ச் 31: பண்டாராயா, சுல்தான் இஸ்மாயில், பி.டபில்யு.டி.சி, தித்திவாங்சா, செந்துல் மற்றும் செந்துல் தீமோர் ஆகிய நிலையங்களை உள்ளடக்கிய அம்பாங்/ஸ்ரீ பெட்டாலிங் வழித்தடத்தில் உள்ள ஆறு எல்.ஆர்.டி நிலையங்களில் போக்குவரத்து சேவை நடவடிக்கைகள் ஏப்ரல் 2 முதல் நிறுத்தப்படும்.

ரேபிட் ரயில் நிறுவனம் இன்று ஒரு அறிக்கையில், பண்டாராயா ஸ்டேஷனிலிருந்து செந்துல் தீமோர் ஸ்டேஷனுக்கு இடையே சேவைக்காக பயன்படுத்தப்பட்ட ரயில்கள் இயக்க அளவுகோல்களை பூர்த்தி செய்ய முடியாததால், பாதுகாப்பு காரணமாக சேவைகள் நிறுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

“தேவைகளுக்கு இடமளிக்கும் வகையில் பாதிக்கப்பட்ட பயணிகளின் பயணத்தை எளிதாக்கும் பொருட்டு, ரேபிட் ரயில் இந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இலவச இரயில் எல்.ஆர்.டி இரயில் 13 மற்றும் எல்.ஆர்.டி இரயில் 14 விரைவு பேருந்து சேவைகளை வழங்கும் என்றும், மேலும் தற்போது உள்ள எல்.ஆர்.டி 11 பேருந்து சேவைகளும் கூடுதலாக்க படும் என அறிவித்துள்ளது.

அனைத்து 40 பேருந்து சேவைகளும் ஒவ்வொரு 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஒரு முறை பரபரப்பான நேரத்தில் இயக்கப்படும் என்றும், மேலும் தற்போதைய போக்குவரத்து நிலைமைகளைப் பொறுத்து இயக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 2 முதல், எல்.ஆர்.டி 9 மற்றும் எல்.ஆர்.டி 10-தில் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என்றும் ரேபிட் ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

“பயணத்தை எளிதாக்கும் வகையில், இந்த அனைத்து பேருந்து சேவைகளும், வழங்கப்பட்ட சிறப்பு பேருந்து வழித் தடங்களைப் பயன்படுத்தும்.

“பயணிகள் எதிர்நோக்கும் அனைத்து சிரமங்களுக்கும் ரேபிட் ரயில் நிறுவனம் மன்னிப்பு கேட்கிறது. பயணிகளின் பொறுமைக்கு நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்” என்று ரேபிட் ரயில் அறிக்கை கூறுகிறது.

 

– பெர்னாமா


Pengarang :