ANTARABANGSAMEDIA STATEMENT

நாட்டில் பழுதடைந்த நிலையில் இருக்கும் 830 பள்ளிகளை கல்வியமைச்சு சீரமைக்கும்

கிள்ளான், ஏப் 1- நாடு முழுவதும் மோசமான நிலையிலுள்ள பள்ளிகளை பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளப்படும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இப்பள்ளிகளின் பாதுகாப்பை அணுக்காக கண்காணிக்கும் பணியை பொதுப்பணி அமைச்சுடன் இணைந்து கல்வியமைச்சு மேற்கொள்ளும்.

அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று துணைக் கல்வியமைச்சர் லிம் ஹூய் யிங் கூறினார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உகந்த சூழலில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்யும் கடப்பாட்டை கல்வியமைச்சு கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதுவரை மோசமான நிலையிலிருக்கும் 830 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்களில் உள்ளன. சீரமைப்புப் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள  கிள்ளான் வர்த்தக மையத்தில் நடைபெற்ற அவான் ஸ்ரீ 1 உயர்கல்விக் கூடத்தின் கல்விக் கண்காட்சியைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அப்பள்ளிகள் எதிர்நோக்கியுள்ள பாதிப்புகள் .குறித்து வினவப்பட்ட போது, அவற்றின் கட்டுமானம் பாதுகாப்பற்றதாகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதகாவும் உள்ளதாக அவர் மேலும் சொன்னார்.


Pengarang :