SELANGOR

தேவைக்கு அதிகமாக உணவு பொருட்களை வாங்குவதால் உணவு கழிவுகள் 40 சதவீதம் அதிகரிப்பு

ஷா ஆலம், ஏப்.5: நோன்பு திறக்கும் சமயம் தேவைக்கு அதிகமாக உணவு பொருட்களை வாங்குவதால் 40 சதவீதம் உணவு கழிவுகள் அதிகரிக்கின்றன.

குடியிருப்பு பகுதிகள் மற்றும் ரமலான் பஜார்களில் கரப்பான் பூச்சிகள், ஈக்கள் மற்றும் எலிகள் போன்றவற்றின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் காரணிகளில் இதுவும் ஒன்று என்று அம்பாங் ஜெயா மாநகராட்சி தெரிவித்துள்ளது.

“இவை சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பங்களிக்கின்றன.

உள்ளூர் அதிகாரசபை ரம்லான் மாதம் முழுவதும் உணவு வீணாக்கப்படுவதை தடுக்க ஒரு பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளது.

எம்.பி.ஏ.ஜேயின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கீழ் இந்த பிரச்சாரம் செயல்படுத்தப்படும். இதன் வழி விழிப்புணர்வை ஏற்படுத்தி மற்றும் அம்பாங் ஜெயா மக்களிடையே உணவை வீணாக்காத கலாச்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும்.

“விழிப்புடன் செலவழிப்பதை பழகுங்கள், உணவை வீணாக்குவதை நிறுத்துங்கள். ரம்லான் பண்டிகையை இன்னும் சிறப்பானதாகக் கொண்டாடுவோம்,”.


Pengarang :