Dzabedah Alisman, 60 (kanan) dan Jubaidah Tarmidi, 61, menggunakan mesin layan diri makanan khusus untuk B40 di Rumah Pangsa Kayu Ara, Petaling Jaya pada 27 Mac 2023. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
SELANGOR

மூத்தக் குடிமக்கள் மற்றும் B40க்குப் பிரிவினருக்கு உதவுவதற்காகப் பண்டார் உத்தாமா தொகுதி உணவு வங்கி திட்டத்தை செயல்படுத்தியது

ஷா ஆலம், ஏப்ரல் 5: உணவு வங்கி திட்டத்தின் மூலம்  (B40)  குறைந்த வருமானம் கொண்ட  20 குடும்பங்களுக்கு, பண்டார் உத்தாமா மாநிலச் சட்டமன்றம் உதவி, ஒவ்வொரு மாதமும் ரி.ம 1,000 ஒதுக்குகிறது.

“வேலை இழந்தவர்கள் மற்றும் முதியோர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள்  ,என்று நிலையிலுள்ள  அவர்கள்  மாநில அரசின் உதவியைப் பெற முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்ததால், உணவு வங்கியை உருவாக்கினோம்.

“அதன் காரணமாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரி.ம 50 ஒதுக்கீட்டில் மாதாந்திர உணவு உதவி வழங்குவதற்காக உணவு வங்கியை நாங்கள் அமைத்துள்ளோம்,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இலக்கு குழு அவர்களின் குடும்பங்களுக்கு போதுமான உணவை வழங்குவதை உறுதி செய்வதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஜமாலியா கூறினார்.

“இந்த முயற்சி குறிப்பாக குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்கும். மற்ற மாநில சட்டமன்ற தொகுதிகளில் இல்லாத ஒன்றை  பண்டார் உத்தமா மாநில தொகுதியின் சிறப்பு இது என்பது தன் கருத்து என்றார்

உணவு வங்கிக்கு கூடுதலாக, பண்டார் உத்தாமா மாநில சட்டமன்றம் நூறு B40 குடும்பங்களுக்கான சுய-சேவை உணவு ,  முன்னோடி திட்டத்தையும் மார்ச் 27 அன்று பண்டார் உத்தாமாவில் உள்ள காயு அரா அடுக்குமாடி குடியிருப்பில் தொடங்கியது.

அவர்களின் இ-வாலட் கணக்கில் வைக்கப்படும் ரி.ம 100 மாதாந்திர கொடுப்பனவைப் பெறுகிறார்கள். சமையல் எண்ணெய், டின்னில் அடைக்கப்பட்ட பொருள்கள், மிளகாய் தூள், காய்ந்த மிளகாய் மற்றும் பானங்கள் உள்ளிட்ட 19 உணவுப் பொருட்களை பயனாளிகள் காலாவதி தேதிக்கு 30 நாட்களுக்குள் பெறலாம்.

உணவுப் பொருட்களைத் தவிர, மற்றொரு விற்பனை இயந்திரம் 45 தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் இருமல் மருந்து, பற்பசை, குளியல் சோப்பு மற்றும் சானிட்டரி நாப்கின்கள் போன்ற மருந்துகளை வழங்குகிறது.


Pengarang :