ECONOMY

பெருநாளை முன்னிட்டு விலைக் கட்டுப்படுத்தப்பட்ட 30 பொருட்களின் பட்டியல் 13ஆம் தேதி வெளியீடு

கோல சிலாங்கூர், ஏப் 5- நோன்புப் பொருளை முன்னிட்டு  பெருநாள் கால விலை உச்சவரம்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 30 பொருட்களின் பெயர்களை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு வரும் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகும்.

பெருநாள் பலகாரங்கள் தயாரிப்பதற்கு பயன்படும் மூலப்பொருட்கள் இந்த விலை உச்சவரம்பு விலைப் பட்டியலில் இடம் பெறும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சாலஹூடின் ஆயோப் கூறினார்.

இந்த விலைக் கட்டுப்பாடு  ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி இரு வாரங்களுக்கு அதாவது நோன்புப் பெருநாளுக்கு ஒரு வாரம் முன்பும் ஒரு வாரம் பின்பும் அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பொருட்களின் விலையை நாம் கட்டுப்படுத்துவதன் மூலம் பொது மக்கள் ரமலான் மற்றும் நோன்புப் பெருநாளை சுமையின்றி கொண்டாடுவதற்கு அரிய வாய்ப்பு கிட்டும் என அவர் சொன்னார்.

கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான விலை இன்னும் அறிவிக்கப்படாத போதிலும் சில பேரங்காடிகள் பொருட்களை “ரஹ்மா“ விலையில் விற்பனை செய்து வருகின்றனர் என்று  அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பெருநாள் காலத்தின் போது முட்டை விநியோகம் போதுமான அளவில் இருக்கும் என விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சு உறுதி அளித்துள்ளதாகவும் சலாவுடின் கூறினார்.


Pengarang :