NATIONAL

மண்வாரி இயந்திரம் கவிழ்ந்து இரு வங்காளதேசிகள் பலி

ஈப்போ, ஏப் 6- மண்வாரி இயந்திரம் ஒன்று கவிழ்ந்ததில் அதனைச்
செலுத்திக் கொண்டிருந்த இரு வங்காளதேச ஆடவர்கள் அதில் சிக்கி
உயிரிழந்தனர். இச்சம்பவம் சிப்பாங் பூலாயில் உள்ள குவாரி எனப்படும்
கல்லுடைப்புப் பகுதியில் நேற்று நிகழ்ந்தது.

முப்பது மற்றும் நாற்பது வயது மதிக்கத்தக்க அவ்விருவரும் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்ததாகச் சிம்பாங் பூலாய் தீயணைப்பு மற்றும் மீட்பு
நிலையத்தின் தலைவர் ஷஹாருடின் துவான் அலி கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் இவு 8.17 மணியளவில் தகவல் கிடைத்ததைத்
தொடர்ந்து 10 பேரடங்கிய குழு ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்ததாக
அவர் சொன்னார்.

குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்த போது கவிழ்ந்ததாக நம்ப ப்படும்
அந்த மண்வாரி இயந்திரத்தின் அடியில் அவ்விருவரும் சிக்கிக்
கொண்டிருந்ததைத் தீயணைப்பு வீரர்கள் கண்டனர்.

பிரத்தியேக உபகரணங்கள் மற்றும் அருகிலுள்ள தொழிற்சாலையிலிருந்து
இரவல் பெறப்பட்ட மண்வாரி இயந்திரத்தைக் கொண்டு மீட்புப் பணிகளை
மேற்கொண்ட தீயணைப்பாளர்கள் அவ்விருவரின் உடல்களையும்
இடிபாடுகளிலிருந்து மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர் என்றார் அவர்.


Pengarang :