NATIONAL

பேரலை நிகழ்வைத் தொடர்ந்து கடல் நீர் பெருக்கெடுக்கும் வாய்ப்பு உள்ளது

ஷா ஆலம், ஏப்.6: எதிர்வரும் சனிக்கிழமை வரை ஏற்படும் பேரலை நிகழ்வைத் தொடர்ந்து கடல் நீர் பெருக்கெடுக்கும் வாய்ப்பை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு கிள்ளான் துறைமுகக் கரையோரத்தை சுற்றியுள்ள மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாலை 6.07 மணியளவில் போர்ட் கிள்ளான் பகுதியில் கடல் மட்டம் 2 மீட்டர் உயரம் இருக்கும் என்றும், தாழ்வான கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்றும் தேசிய ஹைட்ரோகிராஃபிக் மையம் தெரிவித்துள்ளது.

வியாழன் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.38, 7.08 மற்றும் 7.38 மணிக்கு கடல் நீர் மட்டம் 2.2 மீட்டர் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதே நிகழ்வு கோலா மூடா, கெடா, பாகான் டத்தோ, பேராக் மற்றும் பத்து பஹாட், ஜொகூர் ஆகிய இடங்களில் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடலோரப் பகுதி பாதுகாப்புத் தகவல்களுக்குத் தொடர்புடைய நிறுவனங்களை நாடவும். மேலும், தற்போதைய வானிலையை கண்காணிக்கவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அலை அளவுகள் பற்றிய கூடுதல் தகவல்களை hydro.gov.my/ramalanpasangsurut/ என்ற இணையதளத்தில் காணலாம்.


Pengarang :