NATIONAL

தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஹராப்பானுடன் நெகிரி செம்பிலான் அம்னோ பேச்சு

ஷா ஆலம், ஏப் 6- விரைவில் நடைபெறவிருக்கும் மாநிலத் தேர்தலில்
தொகுதிகளை பங்கீடு செய்வது தொடர்பில் பக்கத்தான் ஹராப்பானுடன்
நெகிரி செம்பிலான் அம்னோ தொடக்கக் கட்டப்
பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.

தேர்தலின் போது பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல்
வேட்பாளர்களுக்கிடையே மோதல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும்
அனைத்து 36 தொகுதிகளிலும் இக்கூட்டணி வெற்றி பெறுவதை உறுதி
செய்வதற்கும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநில அம்னோ
தொடர்புக் குழுத் தலைவர் ஜலாலுடின் அலியாஸ் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பில் நான் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஹருணை நேற்று முதன் முறையாகச் சந்தித்தேன்.

ஹராப்பான் மற்றும் பாரிசான் இடையே மோதலைத் தவிக்கக்கூடிய
வகையில் புரிந்துணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம். இதன் தொடர்பில்
கூடியவிரைவில் முடிவு எட்டப்படும் என நம்புகிறோம் என அவர்
சொன்னார்.

நேற்று சிரம்பானில் நடைபெற்ற மாநில அம்னோவின் தொடர்புக் குழுக்
கூட்டத்திற்குத் தலைமையேற்றப் பின்னர் ஜெலுபு நாடாளுமன்ற
உறுப்பினருமான அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Pengarang :