ACTIVITIES AND ADSSELANGOR

 இல்லத்தரசிகளின் சமூகப் பாதுகாப்பு திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் – சுங்கை ராமால் தொகுதி

ஷா ஆலம், ஏப்.6:   இல்லத்தரசி சமூகப் பாதுகாப்பு திட்டத்திற்கு நிதியுதவி பெறுவதற்கு அப்பகுதி  இல்லத்தரசிகள்  சுங்கை ரமால் தொகுதி சட்டமன்ற அலுவலகத்தை  அணுக அழைப்பு விடுத்துள்ளார்  அத்தொகுதி மக்கள் பிரதிநிதி.

அதன் பிரதிநிதி மஸ்வான் ஜோஹர், இல்லத்தரசிகள் RM60 மட்டுமே செலுத்த வேண்டும், மீதமுள்ள தொகை (RM60) சுங்கை ராமால் தொகுதியின் சமூக சேவை மையத்தால் வழங்கப்படும் என்றார்

இல்லத்தரசிகள் வீட்டிற்கு உள்ளேயும் அல்லது வெளியேயும் விபத்துக்களுக்கு ஆளாகிறார்கள். ஆகையால் அவர்களுக்கு  பாதுகாப்பு மிக அவசியம்  “ஒரு வருடத்திற்கு RM120  செலுத்தி  பாதுகாப்பைப் பெற வசதியாக  ஒரு பகுதி  கட்டணத்தை  அரசு ஏற்றுக்கொள்கிறது.

எனவே, இல்லத்தரசிகளும் வேலை செய்பவர்களைப் போன்று பாதுகாப்பு பெறுவது மிகவும் அவசியமானது என முகநூல் மூலம் தெரிவித்துள்ளார்.

விருப்பமுள்ள இல்லத்தரசிகள், சுங்கை ரமால் தொகுதியின் சமூகச் சேவை மைய அலுவலகத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பப் பாரத்தை பூர்த்தி செய்வதோடு அடையாள அட்டை நகல் மற்றும் RM60 ரொக்கம் ஆகியவற்றை கொண்டு வரலாம்.

மேலும் தகவல்களுக்கு 03-8928 9738 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

இல்லத்தரசிகளுக்கு நிரந்தர ஊனம், மருத்துவம் மற்றும் மறுவாழ்வு பலன்கள், முதியோர் உதவித்தொகை, டயாலிசிஸ் உதவி, பணி ஓய்வு மற்றும் உடல் மேலாண்மை மூலம் பாதுகாப்பு அளிக்கும் வகையில், இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.


Pengarang :