MEDIA STATEMENT

முன்னாள் தேசியக் கால்பந்து வீரர் அசார் ஷெரீப் காலமானார்

கோலாலம்பூர், ஏப்ரல் 6: முன்னாள் தேசியக் கால்பந்து வீரர் அசார் ஷெரீப் (58) இன்று அதிகாலை 4.30 மணியளவில் செலாயாங் மருத்துவமனையில் காலமானார்.

இச்செய்தியை மலேசியக் கால்பந்து சங்கம் (FAM) அதன் அதிகாரப்பூர்வ முகநூல் மூலம் உறுதிப்படுத்தியது.

இதற்கிடையில், அவரின் நண்பர் சுல்கிஃப்லி முகமட்டைத் தொடர்பு கொண்டபோது, ​​அசார் அவர்கள் இதயப் பிரச்சனை மற்றும் பக்கவாதத்தால் அவதிப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், அவர் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டதாகவும், மருத்துவமனையில் அவருக்கு ஆக்ஸிஜன் உதவி இயந்திரம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறினார்

அசாரின் உடல் சிலாங்கூரில் உள்ள சுங்கை பூலோ இஸ்லாமிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக சுல்கிஃப்லி கூறினார்.

அவர் மலாயா அணிக்கு 1986 பெஸ்டபோலா மெர்டேகாவை வெல்ல உதவினார். மேலும் 1986 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடந்த சியோல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடினார்.

இறந்தவர் 1984 மற்றும் 1986 மலேசியக் கோப்பை இறுதிப் போட்டிகளில் ரெட் ஜெயண்ட்ஸ் அணி சாம்பியனாவதற்கு உதவியாக ஒரு கோல் அடித்ததன் மூலம் சிலாங்கூர் அணியிலும் முக்கிய பங்கு வகித்தார்.

– பெர்னாமா

 


Pengarang :