ACTIVITIES AND ADSYB ACTIVITIES

 ஏழ்மை நிலையில் உள்ள  மக்களுக்கு அடிப்படை உணவு நன்கொடைகள்

ஷா ஆலம், ஏப்ரல் 6: ரம்லான் பண்டிகையை முன்னிட்டு நேற்று பல தொகுதிகளைச் சேர்ந்த 100 ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு அடிப்படை உணவு நன்கொடைகள் வழங்கப்பட்டன.

2017 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்படும் இந்நிகழ்ச்சியில் அரிசி, மாவு, சர்க்கரை, பிஸ்கட், டின் உணவு மற்றும் பால் பொருள்கள் வழங்கப்படும் என சமூக நலன் எஸ்கோ கணபதிராவ் தெரிவித்தார்.

நன்கொடைகளைப் பெற்றவர்கள் கோத்தா கெமுனிங்பத்து திகா, சுங்கை கண்டிஸ், கோத்தா அங்கெரிக் தொகுதிகள் மற்றும் சிலாங்கூர் அரசாங்கச் செயலர் நலன்புரி கிளப்பைச் (SUK) சேர்ந்தவர்கள் என அவர் கூறினார்.

நோன்பு காலங்களில் அவர்களின் சுமையைக் குறைக்க உதவுவதற்கும் அடிப்படை உணவை சிறிய நன்கொடையாக வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார்.

இனம் மற்றும் நேரத்தைப் பொருட்படுத்தாமல் ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உதவுவதற்குச் சமூகத்தில் நல்ல பண்புகளை இந்த திட்டம் வளர்க்கும் என்றும் அவர் நம்பினார்.


Pengarang :