ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூருக்கு அதிக வருகையாளர்களை ஈர்க்க கப்பல் சுற்றுலாப் பிரிவை வலுப்படுத்துவோம்

ஷா ஆலம், ஏப்ரல் 7: டெர்மினல் கப்பால் பெர்சியாரன் பெலபுஹான் கிள்ளான் மூலம் மாநிலத்திற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க   டூரிசம்  சிலாங்கூர் தீர்மானித்துள்ளது.

“கடந்த ஆண்டு 141 கப்பல்களில் மொத்தம் 342,721 பயணிகள் டெர்மினலுக்கு வருகை புரிந்தனர், இதில்  பிரபலமான பயணக் கப்பல்களான ஜென்டிங் ட்ரீம் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் க்ரூஸ், செலிபிரிட்டி க்ரூஸ், ரீகல் க்ரூஸ், ஸ்டார் க்ரூஸ் மற்றும் ராயல் இன்டர்நேஷனல் க்ரூஸ் ஸ்டாப் ஆகும்.

“எனவே சிலாங்கூர் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அதன் முயற்சிகளைத் தொடர வேண்டும்  என்று அஸ்ருல் ஷா முகமட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில்   மார்ச் 27 முதல் 30 வரை  நடைபெற்ற  சீட்ரேட் குரூஸ் குளோபல் 2023 இல்,   500 கண்காட்சி நிறுவனங்களுடன் டூரிசம் ஏஜென்சி பங்கேற்றுக் கொண்ட பின்  அவர் இதனை கூறினார்.
” டூரிசம் சிலாங்கூர் மற்றும்  டூரிசம் மலேசியாவின் ஒத்துழைப்புடன், பல விளம்பரத் தொடர்கள், FAM பயணங்கள், விற்பனைப் பணிகளில், டிஜிட்டல் பிரச்சாரங்களிலும்  பங்கேற்கும் நாடுகளில்  விளம்பரங்கள் நடத்தப் படுகின்றன,” என்று அவர் கூறினார்.


Pengarang :