ECONOMY

கோவிட்-19 தொற்றை தடுப்பதற்காக ஈவுஷெல்ட் தயாரிப்புக்கு சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது

புத்ராஜெயா, ஏப்ரல் 7:  ஈவு ஷெல்ட் தயாரிப்புக்கு சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது, இது சுவிடன் நாட்டு தயாரிப்பான  அஸ்டன்ஸீகா மருந்து தயாரிப்பு பார்மளருக்கு கூடுதல் அனுமதி வழங்க சுகாதார அமைச்சகம் (MOH) ஒப்புக் கொண்டுள்ளது.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நடைபெற்ற 383 வது மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையக் கூட்டத்தில் (பிபிகேடி) கூடுதல் மருந்து தயாரிப்புக்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

மிகவும் கடுமையான கோவிட்-19 தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும் வயது வந்தோர் மற்றும் இளம்பருவ நோயாளிகளுக்கு குறைந்தது 40 கிலோகிராம் உடல் எடை குறைவும்,  மேலும் சுவாசிக்க ஆக்சிஜன் ஆதரவு தேவையற்றவர்கள். மற்றும்  கோவிட்-19 தடுப்பூசிக்கு போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத நபர்கள் அல்லது கோவிட்-19 தடுப்பூசி பரிந்துரைக்கப் படாத நபர்களுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

“இந்த ஈவுஷெல்ட் தயாரிப்பின் பயன்பாடு சுகாதார அமைச்சகம் வழங்கிய மருத்துவ வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது” என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.


Pengarang :