ANTARABANGSAECONOMY

ஆசியான் நடுநிலை மண்டலமாக இருக்க வேண்டும் – சீனாவில் அன்வார் வலியுறுத்து

கோலாலம்பூர், ஏப்ரல் 8- அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி அதிகரித்துள்ள நிலையில், ஆசியான் சுதந்திரமாகவும் நடுநிலை மண்டலமாகவும் இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

கடந்த வாரம் பெய்ஜிங்கிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது பதிவிடப்பட்ட ஒரு நேர்காணலை சீனாவின் தேசிய ஒளிபரப்பான  சிசிடிவி,  (ஏப்ரல் 7)  வெள்ளிக்கிழமை  இரவு ஒளிபரப்பியது, அப்பேட்டியில் பிரதமர் மேற்கண்டவாறு  கூறினார்.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மற்றும் அதன் உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆசியான் உருவாக்கப்  பட்டது என்றும், இந்த நோக்கங்கள் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

1967 இல் குழுமம் நிறுவப்பட்ட போது, ஆசியானின் ஐந்து தேச  நிறுவன உறுப்பினர்களில் மலேசியாவும் ஒன்று.
“அந்த நிலை தொடர்கிறது. இப்பகுதி இராணுவப் போட்டிக்கான தளமாக இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அனைத்து நாடுகளுடனும் நாங்கள் நட்பாக இருந்த போதிலும் அந்த நிலைப்பாடு மிகவும் நிலையானது,” என்று அவர் பேட்டியில் கூறினார்.

இப்பகுதி அதிகாரப் போட்டா-போட்டிகளுக்கான களமாக இருக்க கூடாது, போட்டியினால் எழும் தேவையற்ற ஆத்திரமூட்டல்களில் மூழ்குவதை அனுமதிக்கக்கூடாது.

AUKUS ஐ மேற்கோள் காட்டி, அன்வார், இந்தோ-பசிபிக் பகுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளடக்கிய முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் பிராந்தியத்தில் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று மலேசியா கவலை தெரிவித்ததாக கூறினார்.

“அதனால்தான் மலேசியா இந்த விஷயத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது மற்றும் இது போன்ற  நிலையை இராணுவ பதட்டம் மோசமாக்குவதை அனுமதிக்கவோ அல்லது ஆத்திரமூட்டும் செயலாகவோ கருதப்படவோ அனுமதிக்க கூடாது என்ற நிலைப்பாட்டில் ஆரம்பம்   முதலே  தொடர்ந்து இருந்து வருகிறது,” என்று அவர் கூறினார்.

சீனாவும் அமெரிக்காவும் தங்கள் பதட்டங்களுக்கு இணக்கமான தீர்வு காண வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.

 

 


Pengarang :