MEDIA STATEMENT

நாய் கடித்து பெண்மணி காயம்- உரிமையாளருக்கு ஒரு மாதச் சிறை

கோலாலம்பூர், ஏப் 21– தனது வளர்ப்பு பிராணியான ஜெர்மன் ஷெப்ஹெர்ட் வகை நாயை வெளியில் விட்டதன் மூலம் பெண்மணி ஒருவருக்கு பலத்த  காயங்கள் உண்டாக காரணமாக இருந்ததற்காக ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு மாதச் சிறைத்தண்டனை விதித்தது.

தனக்கு எதிராக குற்றச்சாட்டை என். திரினி இமானுவேல் நெட்டார் (வயது 53) எனும் ஆடவர் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து மாஜிஸ்திரேட் நுருல் இஸா ஷஹாருடின் இந்த தண்டனையை வழங்கினார்.

இம்மாதம் 16ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு செந்துல், ஜாலான் நங்கா ஆஃப் ஜாலான் கோவில் ஹிலிரில் உள்ள ஒரு வீட்டின் முன்புறம் தனது நாயை வெளியில் விட்டதன்  விட்டதன் மூலம் டி.எஸ்.ஷீலா (வயது 35) என்ற பெண்ணுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட காரணமாக இருந்ததாக அவர் இமானுவேல் குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருந்தார்.

குற்றவாளி என நிரூபிக்கப் பட்டால் ஆறு மாதச் சிறை அல்லது 2,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 289ன் கீழ் அவர் மீது குற்றஞ் சாட்டப் பட்டிருந்தது.

கைது செய்யப்பட்ட நாளான ஏப்ரல் 18 ஆம் தேதியிலிருந்து இமானுவேல் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.


Pengarang :