Uncategorized

செம்பனைத் தோட்டத்தில் தலைமறைவான 57 மாட் ரெம்பிட்கள் 6 மணி நேரத்திற்குப் பின் போலீசில் சரணடைந்தனர்

ஜோகூர் பாரு, ஏப் 23– போலீசாருக்குப் பயந்து செம்பனை தோட்டத்தில் பதுங்கிய “மாட் ரெம்பிட்“ எனப்படும் சட்டவிரோத பந்தயத்தில் ஈடுபட்ட 57 பேர் ஆறு மணி நேரத்திற்குப் பின்னர் போலீசாரிடம் சரணடைந்தனர்.

ஜாலான்  கூலாய்-கோத்தா திங்கி சாலையின் 7 வது கிலோ மீட்டரில் உள்ள அந்த செம்பனைத் தோட்டத்தில் பதுங்கியிருந்த அவர்கள் நோன்புப் பெருநாளை கொண்டாடும் வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதற்காக வெளியில் வந்தாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் தோக் பெங் இயோ கூறினார்.

பதினேழு முதல் 42 வயது வரையிலான அந்த 42 சட்ட விரோத மோட்டார் சைக்கிளோட்டிகளும் கடந்த சனிக்கிழமை அதிகாலை 4.00 மணி முதல் அங்கு பதுங்கியிருந்தாக அவர் சொன்னார்.

எனினும், மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் சாலை போக்குவரத்து விசாரணைப் பிரிவை சேர்ந்த இரு அதிகாரிகள் மற்றும் 13 காவல் துறையினர் அந்த பகுதியைச் சுற்றி வளைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த அதிரடி சோதனையின் போது அந்த சட்டவிரோதப் பந்தயக்காரர்கள் குறுக்கு வழியில் அங்கிருந்த தப்பியோட முயன்றனர். எனினும் போலீசாரின் சுற்றிவளைப்பு காரணமாக அவர்களால் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது என்றார் அவர்.

வேறு வழி இல்லா நிலையில் நேற்று காலை 9.00 மணி முதல் அவர்கள் ஒவ்வொருவராக அந்த செம்பனைத் தோட்டத்திலிருந்து வெளியே வரத் தொடங்கினர். அந்த செம்பனைத் தோட்டத்தின் சூழல் ஒத்து வராதது, பசி மற்றும் நோன்புப் பெருநாளின் முதல் நாள் உணவுப் பதார்த்தங்களை ருசி பார்க்க முடியாத சூழல் ஆகியவை அவர்கள் வெளியில் வரத் வைத்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பிடிபட்ட அந்த 57 பேருக்கு பல்வேறு சாலை குற்றங்களுக்காக 140 குற்றப் பதிவுகள் வெளியிடப்பட்டதாக அவர் அறிக்கையில் சொன்னார்.


Pengarang :