MEDIA STATEMENTNATIONAL

நோன்புப் பெருநாளின் போது 1,381 சாலை விபத்துகள் பதிவு

ஷா ஆலம், ஏப்  24- நோன்புப் பெருநாள் ஓப்ஸ் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் நான்காவது நாளான நேற்று வரை 2,072 வாகனங்களை உட்படுத்திய 1,381 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன.

இக்காலக்கட்டத்தில் கார்கள் சம்பந்தப்பட்ட 1,650 சாலை விபத்துகள் பதிவான வேளையில் அதற்கு அடுத்த நிலையில் மோட்டார் சைக்கிள்கள் (256), பல்நோக்கு வாகனங்கள் (102), வேன்கள் (43), லாரிகள் (13) பஸ்கள் (5), மற்றும் டாக்சிகள் (3) உள்ளதாக அரச மலேசிய போலீஸ் படையின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை கூறியது.

பொதுமக்கள் சாலையை கவனமுடன் பயன்படுத்தும் அதேவேளையில் சட்டதிட்டங்களை மதித்தும் நடக்கும்படி அத்துறை தனது பேஸ்புக் பதிவில் கேட்டுக் கொண்டது..


Pengarang :