ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று மாலை வாகன எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர், ஏப் 24- நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் இன்று மாலை 5.00 மணி வரை வாகன எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதோடு வாகனங்கள் மெதுவாக நகர்வதையும் காண முடிந்தது.

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் தென் பகுதியில் போர்ட்டிக்சன் சந்திப்பு முதல் செனாவாங் ஓய்வு பகுதி வரை, ஆயர் குரோ ஓய்வுப் பகுதி முதல் , யோங் பெங் ஓய்வுப் பகுதி முதல் யோங் பெங் செலாத்தான் வரை, ஆயர் ஹீத்தாம் முதல் சிம்பாங் ரெங்கம் மற்றும் செடேனாக் முதல் கூலாய் வரையிலானப் பகுதியில் அதிக வாகனப் போக்குவரத்து காணப்பட்டதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியம் கூறியது.

அதே சமயம் வடக்கு நோக்கிச் செல்லும் தடத்தில் கூலாய் முதல் கூலாய் ஓய்வுப் பகுதி வரை, செடெனாக் முதல் ஆயர் ஹீத்தாம் வரை, புக்கிட் காம்பீர் முதல் தங்காக் வரை, ஆயர் குரோ முதல் சிம்பாங் அம்பாட் வரை, பெடாஸ் லிங்கி முதல் பெடாஸ் லிங்கி  ஓய்வு பகுதி வரை செனவாங் முதல் போர்ட்டிக்சன் சந்திப்பு வரை, பண்டார் ஆய்ன்ஸ்லெட் முதல் சிரம்பான் வரையிலும் நெரிசல் காணப்படுகிறது என எல்.எல்.எம். பெர்னாமாவிடம் தெரிவித்தது.

அதே சமயம், கோலாலம்பூர் காராக் நெடுஞ்சாலை யில் காராக் சாலைச் சந்திப்பில் இருந்து பெந்தோங் டோல் சாவடி வரையிலும் பெந்தோங் டோல் சாவடியிலிருந்து லெந்தாங் வரையிலும் புக்கிட் திங்கியிலிருந்து கெந்திங் செம்ப வரையிலும் போக்குவரத்து கடுமையாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :