ECONOMYYB ACTIVITIES

சுபாங் ஜெயா தொகுதியில் வெ.20,000 செலவில் அவசரகாலப் பயிற்சி மையம் உருவாக்கம்

ஷா ஆலம், ஏப் 29- சுபாங் ஜெயா சட்டமன்றத் தொகுதி யு.எஸ்.ஜே.13 அவசரகாலப் பயிற்சி மையத்தை 20,000 வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கியுள்ளது.

எதிர்பாராத சூழ்நிலைகளில் அவசர உதவிகளை வழங்குவதற்கு தேவையான பயிற்சிகளை பொது மக்கள் பெற்றிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த திட்டம் அமல்படுத்தப் படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மிஷல் இங் மேய் ஸீ கூறினார்.

எஸ்.ஜே. பீகோன் சுபாங் ஜெயா எமர்ஜென்சி அம்புலன்ஸ் பாராமெடிக் குழுவினரால் நடத்தப்படும் இந்த பயிற்சியில் சி.பி.ஆர். எனப்படும் இருதய செயல்பாட்டை உயிர்ப்பிக்கும் செயல்முறை மற்றும் முதலுதவி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

யாராவது மூச்சுத் திணறலுக்கு ஆளானாலோ அல்லது தொண்டையில் ஏதுவாது சிக்கிக் கொண்டாலே மருத்துவ உதவி கிடைக்கும் வரை அவர்களுக்கு வேண்டிய முதலுதவியை வழங்க இந்த பயிற்சி துணை புரியும் என்றார் அவர்.

இந்த பயிற்சித் திட்டத்தில் கணவர் அல்லது மனைவி ஆகிய குடும்பத் தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். காரணம் வீட்டில் இருக்கும் சிறார்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவசர உதவித் தேவைப்படும் பட்சத்தில் உரிய முதலுதவியை வழங்க இந்த பயிற்சி துணையாக இருக்கும் என்று அவர்  மேலும் சொன்னார்.

கடந்த மூன்று மாத காலத்தில் ஆறு பயிற்சி வகுப்புகளை தாங்கள் நடத்தியுள்ளதாக கூறிய அவர், முதலுதவி வழங்குவதில் பரந்த அனுபவமும் அங்கீகாரமும் பெற்ற மருத்துவ உதவியாளர் இந்த பயிற்சியை நடத்தும் வேளையில் அவருக்கு துணையாக நால்வர் செயல்படுவர் என மிஷெல் குறிப்பிட்டார்.

 

  


Pengarang :