SELANGOR

பந்திங்கில் ஆறு இடங்களில் அடிப்படைப் பொருட்களின் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஏப்ரல் 30: நேற்று தொடங்கிய ஜெலாஜா ஏசான் ரக்யாட் (JER) விற்பனையில் கலந்து கொள்ள , பந்திங் (DUN) தொகுதியில் வசிப்பவர்கள் அழைக்கப் படுகிறார்கள்.

அதன் சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான், அடிப்படைப் பொருட்களின் மலிவு விற்பனை மே மாதத்தின் முற்பகுதியில் ஆறு இடங்களில் நடைபெறும் என்றார்.

“இத்திட்டம் கெஆர்டி தாமான் பந்திங் (ஏப்ரல் 29), தாமான் சூரியா பண்டார் மஹாகோத்தா (ஏப்ரல் 30), சுங்கை ரம்பை இரவு சந்தை (மே 2), டத்தாரான் சாம் குவான், கம்போங் புலாவ் (மே 6), பண்டார் சுங்கை எமாஸ் பிளாட்ஸ் (மே 10) மற்றும் பாலாய் ராயா தமான் யாயாசன் ஜென்ஜரோம் (மே 13) ஆகிய இடங்களில் நடைபெறும்” என்று லாவ் வெங் சான் முகநூல் மூலம் தெரிவித்தார்.

இந்த பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை மலிவான விலையில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :