ACTIVITIES AND ADSECONOMY

நாளை ஒன்பது இடங்களில் அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனை

ஷா ஆலம், மே 1: மாநில அரசின் அடிப்படை பொருட்களின் மலிவு விற்பனைத் திட்டம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஒன்பது இடங்களில் தொடரும்.
சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகம் (PKPS) ஒன்பது மாநில சட்டமன்றங்கள் (DUN) உள்ளடக்கிய  நாளைக்கான எஹ்சான் ரக்யாட் சுற்றுப்பயணத்தை  அறிவித்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் முகமது அர்ஷாத்தின் இல்லம், எண் 2, பாரிட் 9 தைமூர் (சபாக் சட்டமன்ற தொகுதி ), அன்னூர் கம்போங் செபகாட் சுராவ் (புக்கிட் மெலாவதி மாநில சட்டமன்ற தொகுதி) மற்றும் நூருல் ஜன்னா மசூதி (மேரு மாநில சட்டமன்ற தொகுதி) ஆகியவை அடங்கும்.

கூடுதலாக, சுங்கை ரம்பை இரவு சந்தை தளம் (DUN பந்திங்  சட்டமன்ற தொகுதி), ஆலம் சூரியா புஞ்சாக் ஆலம் (ஜெராம் சட்டமன்ற தொகுதி) மற்றும் கம்பொங் செம்பக்கா கூடைப்பந்து மைதானம் (பண்டார் உத்தாமா  சட்டமன்ற தொகுதி).

மற்ற இடங்கள், கம்போங் பாரு ஏ பொது மைதான எதிர்புறம் (உலு பெர்ணம்  சட்டமன்ற தொகுதி), பெக்கான் பாங்கி (சுங்கை ராமல்  சட்டமன்ற தொகுதி) மற்றும் பாங்சபுரி மாவார் செம்பாக்கா (பண்டார் பாரு  சட்டமன்ற தொகுதி கிள்ளான்).

மலிவு விற்பனையின் மூலம், நிலையாக கோழி ஒன்று RM10, புதிய திட இறைச்சி (ஒரு பை RM10) மற்றும் முட்டைகள் (ஒரு பலகை RM10) விற்கப் படுகிறது. மேலும் மீன் கெம்போங் ஒரு பொதிக்கு RM6, 5kg சமையல் எண்ணெய் (RM25) மற்றும் 5 kg அரிசி (RM 10) என்ற விலையில் வழங்குகிறது.


Pengarang :