EKSKLUSIFMEDIA STATEMENT

பந்திங்  வட்டாரத்தில்  பல்லின மக்கள் கலந்து கொண்டு கோல களமான நோன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு

செய்தி  ; சு. சுப்பையா

தெலுக். ஏப்.7-  பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பல்லின மக்கள் கலந்து கொண்டு கோல களமான நேன்பு பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பு  சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விருந்து நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக வந்து கலந்து சிறப்பித்தனர்.

மலாய் உணவு வகைகள் பரிமாறப்பட்டது. 15 க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் பொது மக்களுக்கு உணவு கூடாரங்கள் அமைத்து இரவு 7.45 மணி முதல் தங்களது உபசரிப்பை தொடங்கினர். சிலாங்கூர் மாநில அரசு அதிகாரிகளும் கோல லங்காட் மாவட்ட மன்ற அதிகாரிகளும் நிகழ்ச்சியை  சிறப்பாக வழிநடத்தினர். பி.கே.ஆர், ஜ.செ.க, அம்னோ போன்ற கட்சிகளின் முன்னணித் தலைவர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். பி.கே.ஆர் கட்சியின் கோல லங்காட் தொகுதி தலைவர் ஹரிதாஸ் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஏற்பாட்டுக் குழுவினர் மலாய் பாரம்பரிய ஆடைகள் அணிந்திருந்தது பாராட்டுக்குரியது. ஆண்களும் பெண்களும் தலையில் தெங்கெலுக் அணிந்திருந்தனர். அரச மலேசிய ராணுவத்தின் தரைப் படையை சேர்ந்த இசைக் குழுவினர் ஆடல் பாடலுடன் இன்னிசை நிகழ்ச்சியையும் சிறப்பாக படைத்தனர்.

இப்படி பட்ட நிகழ்வை ஏற்பாடு செய்த சிலாங்கூர் மாநில அரசுக்கு மக்கள் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டனர். பல்லின மக்களுக்கிடையே இப்படி நிகழ்ச்சிகள் ஒற்றுமையை வளர்க்க வழி வகுக்கும் என்று பந்திங் வட்டாரத்தை சேர்ந்த பி.கே.ஆர் கட்சியின் மாவட்ட மன்ற உறுப்பினர் பன்னீர் தெரிவித்தார்.

இந்த சிறப்பு விருந்து நிகழ்ச்சி இரவு 10.30 மணிக்கு மேல் நிறைவுற்றது. நீண்ட நாட்களுக்கு பின் பெரும் திரளான பொதுமக்கள்  கலந்து சிறப்பித்தனர் என்பது பாராட்டுக்குரியது.


Pengarang :