SELANGOR

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் திட்டத்திற்குப் பெற்றோர்கள் திங்கள் முதல் விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், மே 10- பதினெட்டு வயதுக்கும் கீழ்ப்பட்ட மாற்றுத் திறனாளிப்
பிள்ளைகளை கொண்ட பெற்றோர்கள் அனிஸ் எனப்படும் சிறப்புச்
சிறார்களுக்கான உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய
அழைக்கப்படுகிறார்கள்.

உணவு அல்லது கூடுதல் உதவி, உபகரணங்கள் அல்லது கருவிகள்
பழுதுபார்ப்பு, மருந்துகள் உள்ளிட்ட உதவிகளுக்கு வரும் திங்கள்கிழமை
தொடங்கி இம்மாதம் 26ஆம் தேதி வரை விண்ணப்ம் செய்யலாம்.

இது தவிர, மருத்துவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் கல்விக்
கட்டண உதவித் தொகை, சிகிச்சை அல்லது சிறப்பு வகுப்புகளுக்கும்
அவர்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படும்.

இந்த உதவித் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ஒரு முறை மட்டுமே
கூடுதல் பட்சம் 5,000 வெள்ளி உதவி நிதியாக வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை https://www.aniselangor.com எனும்
அகப்பக்கம் வாயிலாக மேற்கொள்ளலாம். விண்ணப்பாரத்தை பிரதி எடுத்து
வேண்டிய கூடுதல் ஆவணங்களுடன் 14 நாட்களுக்குள் சமர்பிக்க
வேண்டும்.


Pengarang :