ECONOMY

தாமான் தாசேக் ஷா ஆலமில் நடைபெற்ற ஒற்றுமை ஓட்ட நிகழ்வில் 3,500 பேர் பங்கேற்றனர்

ஷா ஆலம், மே 27- இங்குள்ள தாமான் தாசேக் ஷா ஆலமில்  இன்று
நடைபெற்ற ஒற்றுமை ஓட்ட நிகழ்வில் பல இனங்களைச் சேர்ந்த 3,500
பேர் கலந்து கொண்டனர்.
மாநில நிலையிலான ஒற்றுமை வாரத்தை முன்னிட்டு இந்த ஐந்து கிலோ
மீட்டர் ஓட்டப் பந்தய நிகழ்வு நடத்தப்பட்டதாக ஒற்றுமைத் துறைக்கான
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கள் இவ்வாண்டிற்கான ஒற்றுமை வாரத்தை சிலாங்கூர் ஏற்று நடத்துகிறது என்று அவர் சொன்னார்.
பல்வேறு இன, சமயங்களைச் சார்ந்த மக்கள் ஒன்றிணைப்பதற்கும்
ஆரோக்கிய வாழ்க்கை முறையைக் கடைபிடிப்பதற்கும் இந்த ஓட்டப்
பந்தய நிகழ்வு துணை புரியும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒற்றுமை வாரத்தையொட்டி நடத்தப்பட்ட இந்த ஓட்ட நிகழ்வின் ஒரு
பகுதியாக கலாசார நிகழ்வுகள், அரசு துறைகளின் கண்காட்சி, பொருள்
விற்பனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று அவர் தெரிவித்தார்.

மலேசிய மடாணி அரசாங்கத்தின் ஒற்றுமையை அடிப்படையாக கொண்ட
முன்னெடுப்புகளில் ஒன்றான இந்த ஒற்றுமை வார நிகழ்வு
ஒவ்வோராண்டும் மே மாதத்தின் இறுதி வாரத்தில் அனுசரிக்கப்படுகிறது.


Pengarang :