MEDIA STATEMENT

ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த எட்டு வயதுச் சிறுவன் மாயம்- தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரம்

ஈப்போ, ஜூன் 4- ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது  மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் எட்டு வயதுச் சிறுவனைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சோங் மாலிம், சிம்பாங் அம்பாட், தெராத்தாக் ரிவர் வியூ லுபோக் அந்துவில் உள்ள ஆற்றில் இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்ததாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் சுபாரோட்சி நோர் அகமது கூறினார்.

அச்சிறுவன் காணாமல் போனது தொடர்பாக நேற்று மாலை 5.06 மணியளவில் தமது தரப்புக்கு தகவல் கிடைத்ததாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

சம்பவ இடத்தை அடைந்த போது, நீரில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல் போனதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தங்களிடம் தெரிவித்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

அச்சிறுவனம் காணாமல் போன இடத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் சுற்றளவில் கிராம மக்களின் உதவியுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.

இந்த தேடி மீட்கும் நடவடிக்கையின் 10 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ள வேளையில் தெலுக் இந்தான் தீயணைப்பு நிலையத்திலிருந்தும் மீட்புப் பணியாளர்களின் உதவி நாடப் பட்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :